Wednesday, October 21, 2009

தமிழ் நாடு அரசு விருதுகள்

சில நாட்கள் முன், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் விருதுகளின் பட்டியலை படித்தேன் ... முழு நீள நகைச்சுவை தான்
ஏற்கனவே இந்த "பாராட்டு கவியரங்கம்" என்ற பெயரில் கூத்தடித்து போதாது போலும். (வைரமுத்து தொல்லை தாங்கவே முடியாது. மற்றவர்களும், தன்னுடைய தமிழ் ஆர்வத்தை தோண்டி எடுத்துக்கொண்டு வருவார்கள். எவ்வளவு நன்றாக வாசிக்கிறார்களோ, அதற்கு ஏற்ற மாதிரி தானே "சீட்டு")

"உளியின் ஓசை" என்று ஒரு திரைப்படம் வந்ததே பல மக்களுக்கு தெரியாது.
அதற்கு போய் சிறந்த வசனத்திற்கு "நமுக்கு நாமே" திட்டம் போல, "தனக்கு தானே" விருது.
அதே திரைப்படத்திற்கு "சிறந்த நகைச்சுவை நடிகை" விருது கோவை சரளாவிற்கு. என்ன நகைச்சுவை ???
"சுப்ரமணியபுரம்" - அனைவராலும் பாராட்டப்பட்ட அந்த படத்திற்கு ஒரே ஒரு விருது. அதுவும் பின்னணி பாடியவருக்கு மட்டும். இதே மாதிரி சில நல்ல படங்களை மறந்து போயாகிவிட்டது... அப்போ தானே, இவர் படங்களுக்கு இடம் இருக்கும்.
எப்போ பார்த்தாலும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விருது, அதில் ஒன்று கமலுக்கும் இன்னும் ஒன்று ரஜினிக்கும். ஹையோ ஹையோ .
திறமையை உக்கப்படுத்த தான் விருதுகள். தன்னையே புகழ்ந்து பாராட்ட அல்ல.
நல்ல கூத்து...


Thursday, October 15, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்


இல்லத்தில் ஒளியும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவு பெற...
புத்தாடை அணிந்து
இனிப்பை பகிர்ந்து
இன்பமாய் இந்நாளும், எந்நாளும் அமைய...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்